காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன | schools reopen yesterday after quarterly exam

1323283.jpg
Spread the love

சென்னை: காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அக்கோரிக்கையை ஏற்று காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். பெரும்பாலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பள்ளி திறந்த முதல் நாளிலேயே வழங்கப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *