காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? | Does skipping breakfast have negative effects on health?

Spread the love

காலை உணவு அவசியம் சாப்பிட வேண்டுமா, தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பது சம்பந்தப்பட்ட நபரின் வயதையும் தேவையையும் பொறுத்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தையாகவோ, கல்லூரி செல்லும் டீன் ஏஜராகவோ அல்லது கர்ப்பிணியாகவோ இருந்தால் காலை உணவைத் தவிர்ப்பது சரியானதல்ல. வளரும் பருவத்தில் உள்ள இவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான தேவைகளுக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். 

மட்டுமன்றி எடை குறைவான குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக்குப் பிறகு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளோர், ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் போன்றோர் கட்டாயம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளை சாப்பிடலாம்.

காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற “லைட்’டான உணவுகளை சாப்பிடலாம்.

எனவே. காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற ‘லைட்’டான உணவுகளைச் சாப்பிடலாம். 

அதுவே ஒரு நபர், எடைக்குறைப்பு முயற்சிக்காக காலை உணவைத் தவிர்க்க நினைக்கிறார் என்றால், அவர் தன்னிச்சையாக அந்த முடிவை எடுப்பது சரியாக இருக்காது. ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி, அவருக்கேற்ற உணவுமுறையைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.

சிலர் காலையில் நேரமில்லை என்றோ, பசியில்லை என்றோ சாப்பிடுவதைத் தவிர்த்திருப்பார்கள். ஆனால், மதிய உணவுக்கு முன்பே, பசி எடுத்து, நொறுக்குத்தீனிகளைத் தேடிச் சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமற்றது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *