கால்பந்து போட்டியில் களமிறங்கிய மெஸ்ஸியின் மகன்..!

Dinamani2f2024 11 262fd23lnwap2fthiago.jpg
Spread the love

கால்பந்து உலகில் மிகவும் புகழ்பெற்ற வீரர் லயோனல் மெஸ்ஸி. 8 முறை பாலன்தோர் விருது (தங்கப் பந்து) பெற்று அசத்தியுள்ளார்.

கடந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இண்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடிவருகிறார். அவரது சிறப்பான பங்களிப்பினால் இன்டர் மியாமி அணி முதல்முறையாக எம்எல்எஸ்-இன் சப்போர்டர்ஸ் ஷீல்டு கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸியன் மகன் தியாகோ மெஸ்ஸி 12 வயதாகிறது. ஆர்ஜென்டீனாவில் நேவெல்ஸ் கோப்பைக்கான 13 வயதுக்குட்பட்டோருக்கான இன்டர்மியாமி அணியில் விளையாடுகிறார்.

வடக்கு, தென் அமெரிக்காவிலுள்ள 8 கிளப் அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டிகள் 5 நாள்களில் நடைபெறுகிறது.

தந்தையின் ஜெர்ஸி எண் 10 உடன் மகன் தியாகோ மெஸ்ஸியும் களமிறங்குகிறார்.

மெஸ்ஸி ரோசாரியோவில் பிறந்தவர். நேவெல்ஸ் ஓல்டுபாய் சார்பாக 5 வருடம் விளையாடிய மெஸ்ஸி பின்னர் 13 வயதில் பார்சிலோனா அணியில் சேர்ந்தார்.

37 வயதாகும் மெஸ்ஸி அதிகமான போட்டிகள் பார்சிலோனாவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்டர்மியாமியில் விளையாடுகிறார்.

இந்தப் போட்டியை தியோகோ மெஸ்ஸியின் அம்மா, அவரது தந்தை, தாத்தா பாட்டியுடன் பார்வையிட்டார்கள். இதில் நேவேல்ஸ் அணி 1-0 என இன்டர்மியாமியை வீழ்த்தியது.

இவர்களுடன் இன்டர் மியாமி ஸ்டிரைக்கர் லூயிஸ் சௌரேஜ் மகன் பெஞ்சமின் சய்ரேஜ் தியாகோ மெஸ்ஸியுடன் விளையாடினார். அடுத்தபோட்டி உருகுவே கிளப் அணியுடன் இன்று நடைபெறுகிறது.

இதுவரை, தியாகோ மெஸ்ஸி 12 வயதுக்குட்பட்டோருக்கான 6 போட்டிகளில் 13 கோல்கள், 7 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *