கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?

dinamani2F2025 08 202Fntgy4uze2FWhatsApp Image 2025 08 20 at 1.23.17 PM
Spread the love

இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களின் விலை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தங்கள் அலுவல் நேரங்களில் ‘ஆவா'(Aava) என்ற நிறுவனத்தின் தரம் மிக்க குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் ஆணையர்கள் பல்வேறு அலுவலகக் கூட்டங்களில் இந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

hh

‘ஆவா’ நிறுவனத்தின் இணையதளத்தில் கால் லிட்டர் (250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 1,600 (8 பாட்டில்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு 250 மிலி குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 200. (நாள் ஒன்றுக்கு அலுவலக நேரத்தில் குறைந்தது 2 லிட்டர் குடிநீர் பயன்படுத்தினால் அதன் விலை ரூ. 1,600)

இதுவே தள்ளுபடியில் வாங்கினால் 8 பாட்டில்களின் விலை ரூ. 999. ஒரு 250 மிலி பாட்டிலின் விலை ரூ. 125 ஆகிறது.

மேலும் இந்த பாட்டில் கண்ணாடியால் ஆனது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் அல்ல. சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் ரூ. 10, 20-க்கு குடிநீர் பாட்டில்கள் வாங்கும் நிலையில், தேர்தல் ஆணையர்கள் நாள் ஒன்றுக்கு குடிக்கும் தண்ணீரின் விலை மட்டுமே ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

Price of drinking water bottles used by Election Commissioners in the Election Commission of India

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *