எங்க பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையம் மூலமாக நூற்றுக்கும் அதிகமானவங்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சிகள் கொடுத்திருக்கேன். என்கிட்ட பயிற்சி எடுத்தவங்க இன்னிக்கு காளான் உற்பத்தியை தங்களோட பிசினஸாக மாத்தியிருக்காங்க. அவங்களுக்கு உற்பத்தி மட்டுமில்லாம, விற்பனை, மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும் உதவுறேன். அவங்க உற்பத்தி பண்ற காளான்களை நானே கொள்முதல் பண்ணி விற்பனையும் பண்ணிக்கொடுக்குறேன். நாங்க உற்பத்தி பண்ற காளான்களை ஹோட்டல்கள், கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்குறோம். கடந்த எட்டு மாசமா நெய்வேலியில் காளான் உணவு கடை ஒன்றை ஆரம்பிச்சிருக்கேன். காளான் சூப், கிரேவி, தோசை, பிரியாணினு காளான் மூலம் செய்யக்கூடிய உணவுகளை மட்டும் தயார் பண்ணி விற்பனை பண்ணிட்டு இருக்கேன். எங்க தேவைகள் போக மீதமுள்ள காளானில் பிஸ்கட், ஊறுகாய், சூப் மிக்ஸ்னு மதிப்புக்கூட்டல் செஞ்சும் விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம்.

ஒரு கிலோ காளான் 200 ரூபாய் வரை விலை போகுது. என் கணவரும் என்கூட சேர்ந்து காளான் வளர்ப்பு பிசினஸ்தான் பண்றாரு. ஆறுபேர் வேலைக்கும் இருக்காங்க. இப்போ என் பிசினஸ் மூலமா மாசம் ரெண்டு லட்சம் வரை டேர்ன் ஓவர் பண்றேன். ‘எம்.பி. ஏ படிச்சுட்டு வைக்கோல் கொட்டகைனு தேவையில்லாத வேலை பார்க்குது’னு சொன்னவங்களுக்கு என் வெற்றி மூலமா பதில் கொடுத்திருக்கேன். உழைக்கத் தயாரா இருந்தா அதுக்கேத்த கூலி நிச்சயம் கிடைக்கும். எந்த வேலையும், உழைப்பால் கிடைக்கும் எந்த வருமானமும் வெற்றியின் வெளிப்பாடே” என்று கெத்தாக சொல்கிறார் கெளரி.