‘காளியம்மாள் எப்படி அதிமுகவில் இணைந்தார்?’ – பின்னணி என்ன? |Kaliammal’s Entry into AIADMK: What’s the Story Behind It?

Spread the love

நல்ல பொறுப்பை கொடுப்பார் என காளியம்மாள் காத்திருந்தார். விஜய்யும் சில சமயங்களில் ‘அவங்க ஏன் இன்னும் வரல..’ என காளியம்மாள் குறித்து அப்டேட்டும் கேட்டிருக்கிறார். சுற்றியிருக்கும் வியூக தரப்பு எதை எதையோ சொல்லி சமாளித்துவிட்டது என்கிறார்கள்.

இடையில் திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பு காளியம்மாளிடம் பேசிப் பார்த்தது. கட்சி ஆரம்பிக்கும் முடிவை எடுத்தவுடன் சசிகலா தரப்பும் தீவிரமாக முயன்றிருக்கிறது. காளியம்மாள் யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. இறுதியாகத்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் களத்தில் இறங்கி காளியம்மாள் மனதை மாற்றியிருக்கிறார்.

TVK Vijay - தவெக விஜய்

TVK Vijay – தவெக விஜய்

ஓராண்டாக காத்திருந்தும் விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால், ஓ.எஸ்.மணியனின் அழைப்பை ஏற்கும் மனநிலைக்கு காளியம்மாள் வந்திருக்கிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பெண்களின் வாக்குகளை மையப்படுத்தியதாக இருக்கப்போவதால், அதிமுகவின் பிரசாரத்துக்கு காளியம்மாள் வலுசேர்ப்பார் என எடப்பாடி நம்புகிறார்’ என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *