தமிழ்நாடு போலீஸ் (Tamilnadu Police) என்ற இணையப்பக்கத்துக்கு சென்றவுடன், முகப்புப் பக்கத்திலேயே `இணையத்தில் புகாரளித்தல்’ (Register Online Complaint) என்றிருக்கும்.

அதனுள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவையும் (Captcha) உள்ளிடவும். இதனைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் கடவு எண்ணையும் (OTP) உள்ளிடவும்.
தொடர்ந்து, திரையில் தோன்றும் பொருள் (Subject) என்ற பெட்டியில் உங்கள் புகாரின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்.

இதன்பின்னர், அழைத்து செல்லப்படும் பக்கத்தில் இடதுபுறத்தில் உங்கள் பாலினம், பிறந்த தேதி, வீட்டு முகவரி, அஞ்சல் முகவரி (விருப்பமென்றால்) முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.

பின்னர், வலதுபுறம் உள்ள தேதியில் (Date of Occurrence) குற்றமிழைக்கப்பட்ட அல்லது புகாரளிக்கப்பட வேண்டிய தேதியை உள்ளிடுக. இதனைத் தொடர்ந்து, குற்றமிழைக்கப்பட்ட அல்லது புகாரளிக்கப்பட வேண்டிய இடத்தையும் (Place of Occurrence) குறிப்பிடவும். அதன்கீழ் உள்ள பெட்டியில், குற்றம் அல்லது புகார் குறித்த சுருக்கமான விவரத்தை உள்ளிடவும்.
மேலும், புகார் தொடர்பான புகைப்படமோ விடியோவோ, எதுவாயினும் பதிவேற்றி (Choose File) உள்ளிடலாம். இதனைத் தொடர்ந்து, இறுதியில் உள்ள எண்ணையும் உள்ளிட்டு, கீழுள்ள பதிவிடுக-வை (Register) அழுத்துவதன் மூலம் தங்கள் புகாரை பதிவு செய்து விடலாம்.
உங்களுக்கு ஏதேனும் ஆன்லைனில் புகாரளிக்க வேண்டியிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்.