Last Updated:
“ஸ்டாலின் காவல்துறையை நிர்வகிக்க முடியவில்லை என சொன்னால் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்” என அண்ணாமலை தெரிவித்தார்.
“முதலமைச்சர், ‘தமிழ்நாட்டையும், காவல்துறையையும் என்னால் நிர்வாகம் செய்ய முடியவில்லை’ என்று தெளிவாக சொல்லிவிட்டால் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருட்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைவதை ஒன்றிய அரசின் முகமைகள் தடுக்க வேண்டும்” என இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்து பதில் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசுதான் என திருப்பிப் பார்க்கிறார்கள். மாநில அரசின் கீழ்வருவது, சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்டவை. அதற்காகத்தான் காவல்துறை முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் உளவுப் பிரிவும், கஞ்சா ஒழிப்பு பிரிவும் முதலமைச்சரின் பொறுப்பு. மத்திய அரசு மாநில அரசுக்கு உதவி செய்வதற்காக என்.சி.பி. எனும் அமைப்பை வைத்துள்ளது. மற்ற ஆட்சியில் சிறப்பாக அதே காவல்துறை, இன்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
அந்நிய நாடுகளில் இருந்து போதைப் பொருள் உள்ளே வரும்போதுதான் அது மத்திய அரசின் பொறுப்பு. அதில் மத்திய அரசு சிறப்பாக பணியாற்றிவருகிறது. இவ்வளவு பேசும் முதலமைச்சர், ‘தமிழ்நாட்டையும், காவல்துறையையும் என்னால் நிர்வாகம் செய்ய முடியவில்லை’ என்று தெளிவாக சொல்லிவிட்டால் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். மக்களுக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பொறுப்புகள் என்ன என்பதை தெளிவாக தெரிந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
“காவல்துறையை நிர்வகிக்க முடியவில்லை.. ஸ்டாலின் சொல்லிவிட்டால் மத்திய அரசு பார்த்துகொள்ளும்” – அண்ணாமலை
