“காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்” – த.வெ.க நிர்வாகியிடம் புதுவை பெண் போலீஸ் | “You don’t tell the police what to do” – Puducherry female police officer to TRP executive

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த அக்டோபரில் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிறகு வெளியில் பரப்புரை, சுற்றுப்பயணம், பிரசாரம் என எதையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று புதுச்சேரியில் மக்களைச் சந்திக்கிறார்.

த.வெ.க - விஜய்

த.வெ.க – விஜய்

முன்னதாக த.வெ.க தரப்பில் இதற்கு அனுமதி கோரியபோது விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், 5,000 பேர் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதிச் சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி - முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்

புதுச்சேரி – முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்

அப்போது ஆத்திரமடைந்த ஈஷா சிங் த.வெ.க நிர்வாகியிடம், “உங்களால நிறைய பேர் உயிரிழந்திருக்காங்க. யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்” எச்சரித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *