காஷ்மீரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

Dinamani2f2025 04 232flnyze5wy2fomar Abdullah Mourning Pti.jpg
Spread the love

ஜம்மு – காஷ்மீரில் நாளை (ஏப். 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகரான ஸ்ரீநகரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு – காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாதிகளின் இத்தகைய செயலுக்கு கூட்டாக கண்டனம் தெரிவிப்பதுடன், நீதி மற்றும் அமைதியை உறுதிசெய்யும் பாதையில் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *