ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த கொடூரச் செயலில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்புப் படையினரால் தக்க பதிலடி கொடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.
இந்நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.