காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! SC seeks Centre’s response in 8 weeks on plea seeking restoration of statehood to Jammu and Kashmir.

dinamani2F2025 08 082Fqv0cwa2s2FANI 20250808151153
Spread the love

ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

பின்னர் இதுதொடர்பான வழக்கில் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 2024ல் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டு ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, ஆட்சி நடத்தி வருகிறது. எனினும் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *