காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

Spread the love

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கனமழை தீவிரமடைந்துள்ளதால், ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் ஆற்றின் நடுவே இருந்த பாலங்கள், மின் கம்பங்கள் மற்றும் மொபைல் கோபுரங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், ஜம்முவில் அடுத்த 40 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக, கிஷ்த்வார் – தோடா தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *