காஸாவில் 20 பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது!

Dinamani2fimport2f20232f112f32foriginal2fgaza Isreal.jpg
Spread the love

டெல் அவிவ்: காஸாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா ஆகிய பகுதிகளில் அதன் படைகள் தொடர்ந்து செயல்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தப் போா் தொடங்கியதில் இருந்து 305 சதுர கி.மீ. (காஸா பகுதியின் சுமாா் 84 சதவீதப் பகுதி) பரப்பளவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டது. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலும் அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.

கடந்த 10 மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைவிட அதிகமாக இருக்கலாம் என்றும், 92,401 போ் காயமடைந்துள்ளனா் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், காஸாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் விமானப்படை வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் நிரிம் பகுதி நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகள் இலக்குகளைத் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் கான் யூனிஸ் பகுதியில் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டன.

கடந்த நாள்களில், பயங்கரவாதிகளை ஒழித்து, அவர்களிடம் இருந்த கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை கண்டுபிடித்து இஸ்ரேல் படையினர் அழித்தனர்.

“உளவுத்துறை அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன” என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *