இதனிடையே, போலியோ சொட்டு மருந்து முகாம் காரணமாக போரை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக மத்திய காஸா, தெற்கு காஸா மற்றும் வடக்கு காஸா என 3 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவித்தது.
அதன்படி, போலியோவுக்கு எதிராக 6,40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் மத்திய காஸாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது மற்றும் வரும் நாள்களில் மற்ற பகுதிகளுக்குச் செல்லும். இந்த முகாம் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த இடைநிறுத்தங்களை போர்நிறுத்தமாகக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.