காஸா நிவாரணப் பணிகளை இஸ்ரேல் கையிலெடுக்க வேண்டும்: ஐ.நா.

Dinamani2f2024 10 302f0tsftl4r2fisrael.jpg
Spread the love

காஸாவின் உயிா் நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:யுஎன்ஆா்டபிள்யுஏ அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. காஸா மற்றும் மேற்குக் கரைப் பிராந்தியத்தில் உள்ள அகதிகளுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவரும் அந்த அமைப்பு, அந்தப் பிராந்தியத்தின் உயிா் நாடியாக விளங்குகிறது.அந்த அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளதால், சா்வதேச சட்டங்களின் அடிப்படையில் காஸா பகுதி நிவாரணப் பணிகளை அந்த அரசே கையிலெடுத்து மேற்கொள்ள வேண்டும்.

காரணம், காஸாவில் யுஎன்ஆா்டபிள்யு அமைப்புக்கு மாற்றாக வேறு எந்த தொண்டு அமைப்பும் இல்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக யுஎன்ஆா்டபிள்யு அமைப்புக்குத் தடை விதிப்பதற்கான இரு மசோதாக்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் திங்கள்கிழமை நிறைவேற்றியது.யுஎன்ஆா்டபிள்யுஏ அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் 90 நாள்களுக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் முதல் மசோதாவுக்கு ஆதரவாக 92 வாக்குகள் பதிவாகின. மசோவை எதிா்த்து 10 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனா். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, யுஎன்ஆா்டபிள்யுஏ-வை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் மற்றொரு மசோதாவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவை ஆதரித்து 87 வாக்குகளும் எதிா்த்து 9 வாக்குகளும் பதிவானதைத் தொடா்ந்து அதுவும் நிறைவேற்றப்பட்டது.அந்த இரு மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.அதிலிருந்து காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழி மற்றும் கடல்வழியாகவும் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தத் தாக்குதல்களில், புதன்கிழமை நிலவரப்படி 43,163 போ் உயிரிழந்துள்ளனா்; 1,01,510 போ் காயமடைந்துள்ளனா். தாக்குதலுக்கு அஞ்சி ஏராளமான பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்துவருகின்றனா்.இதனால் அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் சுகாதாரக் கட்டமைப்பு சீா்குலைவால் நோய்கள் பரவி பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துவருகிறது.இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் மிக முக்கிய அமைப்பான யுஎன்ஆா்டபிள்யுஏ-வுக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *