கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த 15 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இஸ்ரேல் – காஸா இடையிலான போர் காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்த நிலையில், தற்போது இரு தரப்பினரும் முழுமையாக ஒப்புதல் அளித்ததால் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வருகிற ஞாயிறு (ஜன. 19) முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.