காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குக: எல்.முருகன் வலியுறுத்தல் | L Murugan urges to provide 100rs subsidy on gas cylinder

1357441.jpg
Spread the love

ஈரோடு: சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நேற்று வழிபாடு செய்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திமுக தேர்தல் அறிக்கையில், சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதியை கடந்த 4 ஆண்டுகளாக திமுக நிறைவேற்றவில்லை. தற்போது காஸ் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ளதாகக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *