கிங் மேக்கரை வீழ்த்திய இந்திரா – கருணாநிதி கூட்டணி: 1971 தேர்தல் ரகசியங்கள்! | The Indira-Karunanidhi Alliance That Defeated the ‘Kingmaker’: Secrets of the 1971 Election!

Spread the love

1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தேசிய அரசியலில் கோலோச்சிய காமராஜர் மற்றும் ராஜாஜி ஆகிய இரு துருவங்களின் செல்வாக்கு சரிந்து, கருணாநிதி தலைமையிலான தி.மு.க தேசிய அளவில் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்த தருணம் அது.

காங்கிரஸ் பிளவும் அதிகாரப் போட்டியும்:

லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு, இந்திரா காந்தியைப் பிரதமராக அமர்த்தியவர் காமராஜர். ஆனால், பதவியேற்ற பிறகு இந்திரா காந்தி தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார். கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி, காமராஜரின் ஆலோசனைகளை மீறி முடிவெடுத்தார். இதன் விளைவாக, இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. காமராஜர் தலைமையில் மூத்த தலைவர்களைக் கொண்ட “ஸ்தாபன காங்கிரஸ்’ என்றும், இந்திரா காந்தி தலைமையில் ‘இந்திரா காங்கிரஸ்’ என்றும் இரு அணிகளாகப் பிரிந்தன.

கூட்டணி மாற்றங்கள்:

தமிழகத்தில் 1967-ல் தி.மு.க-வை ஆதரித்த ராஜாஜியின் சுதந்திரா கட்சி, 1971-ல் தனது பரம எதிரியான காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸுடன் கைகோர்த்தது. இதனை ‘மகா கூட்டணி’ என்று அழைத்தனர். மறுபுறம், ஆளுங்கட்சியான தி.மு.க, இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, ஓராண்டு முன்னதாகவே சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *