கிடைத்தது ஜாமீன்…கெஜ்ரிவால் நிம்மதி…

Kej
Spread the love

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல் அமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது.

இடைக்கால ஜாமீன்

பின்னர் அவர் ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 10ந் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் ஜூன் 2-ம்தேதி சிறைக்கு திரும்பினார்.

Kej02
இதையடுத்து உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதற்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனால் கேஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது நீதிமன்றக் காவலை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு நேற்று (19ந்தேதி) உத்தரவிட்டது.

ஜாமீன் கிடைத்தது

விசாரணையின்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ கூறுகையில், “இந்த வழக்குடன் தொடர்புடைய அத்தனை முடிச்சுகளும் கடைசியில் கேஜ்ரிவாலிடம் வந்துதான் முடிகின்றன. முறைகேடுகளுக்காக அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.100 கோடி வரை லஞ்சம் கேட்டதாக முதலில் குற்றம்சாட்டியது சிபிஐ தானே தவிர அமலாக்கத் துறை அல்ல” என்றார். இதற்கு எதிரான வாதங்களை கேஜ்ரிவால் தரப்பு முன்வைத்தது.

இந்தநிலையில், டெல்லிசிறப்பு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, அவர் நாளை (வெள்ளிக்கிழமை) சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் அவரது வக்கீல் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:

விஷசாராய பலி-42; உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *