இதன் விளைவாக இவரின் ஓவியங்கள் பெரிதும் பேசும்பொருளாய் மாறியது. அது ஆபாசம் சார்ந்ததாகவும், பெண் அழகியல் சார்ந்ததாகவும் அதிகம் இருந்தது. ஆரம்பகால கட்டத்தில் கிளிம்ட் வரைந்த இயற்கை ஓவியபாணி ஓவியங்களை வரவேற்ற கலை விமர்சகர்கள், புதிய பாணியாக கையாளப்பட்ட இந்த ஆபாச ஓவியங்களை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அத்தகைய ஒவியங்களால்தான் கிளிம்ட் உலகின் உன்னத ஓவியர்களில் ஒருவராக இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பதுவே மறுக்க முடியாத உண்மையாகும்.
லிசபெத் லெடரர் ( ‘Portrait of Elisabeth Lederer’)
இந்த ஓவியம், 1914-1916 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், வியன்னா பொற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஓவியத்தில் லிசபெத் லெடரர் என்ற பெண், வெள்ளை அங்கி அணிந்து கொண்டு நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டுகிறது. மேலும் இது இதுவரை மிக அதிக விலைக்கு ஏலம் போன நவீன ஓவியம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் $236.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2000 கோடி) விற்கப்பட்டது.
இதுவரை மிக அதிக விலைக்கு ஏலம் போன நவீன ஓவியம் என்ற சாதனை படைத்துள்ளது.
யார் இந்த எலிசபெத் லெடரர்?
குஸ்டாவ் கிளிம்ட் நண்பராக அவரோடு சேர்ந்து பணியாற்றிய தன் வாடிக்கையாளர்களில் ஒருவரது மகள்தான் இந்த ஓவியத்தில் இருப்பவர் என்று கூறப்படுகிறது.