இதனைத் தொடர்ந்து, அந்த சோதனையில் சிறுத்தை கிணற்று நீரில் மூழ்கியதினால்தான் பலியாகியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு போலீஸார் அந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக, போரஞ்ச் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி மக்கள் கூண்டமைத்து விலங்குகளை பிடிக்குமாறு வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.