அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு “கிரீன்லாந்து’ மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது ‘கியூபா’விற்கு வந்திருக்கிறது போலும்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ட்ரம்ப். அப்போது அவரிடம் அமெரிக்காவிற்கு ஈரான், கியூபா போன்ற நாடுகளுடன் இருக்கும் பிணக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அமெரிக்காவின் கைகளுக்கு செல்கிறதா கியூபா?
.
இந்தக் கேள்விக்கு ட்ரம்ப், “கியூபா அரசு நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பெரிய பிரச்னையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
அவர்களிடம் பணம் கிடையாது. அவர்களிடம் இப்போது ஒன்றுமே கிடையாது. அவர்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஒருவேளை, தோழமை ரீதியில் கூட, நாம் கியூபாவைக் கைப்பற்றலாம்.
அவர்களிடம் இப்போது பணம் இல்லை, எண்ணெய் இல்லை, உணவு இல்லை. அதனால், அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ இந்த விஷயத்தைக் கையாண்டு வருகிறார்” என்று பதிலளித்துள்ளார்.