ஏன் உறுதியான ஆய்வுகள் இல்லை என்றால், கர்ப்பிணிகளை வைத்து இத்தகைய ஆய்வுகளைச் செய்வது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.
இதனால், கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே சென்றால் கருக்கலைப்பு ஏற்படும் அல்லது குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துகளுக்கு எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. அவர்கள் வெளியே செல்வதால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது.

இருந்தாலும் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது!
கிரகண காலத்தில் அதிக வெப்பநிலை, வெப்ப அலைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் இருக்கலாம். அதனால், அந்த நேரத்தில், கர்ப்பிணிகள் அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இன்னொரு பக்கம், இதற்கு மனநிலை காரணமும் உள்ளது. உதாரணத்திற்கு, கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே சென்றால், “இந்த நேரத்துல ஏன் வெளிய வந்த… குழந்தைக்கு எதாவது ஆச்சுனா என்ன பண்ணுவ?’ மாதிரியான பேச்சுகள் எழும்.
இது அந்தப் பெண்ணுக்கு மன அழுத்தம், பயம், பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இது அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும்.