சுதா சேஷய்யன் பேசியதாவது:
“ஒரு நோயாளிக்கு 30 மருத்துவர்களோ 30 பயிற்சியாளர்களோ இருக்க முடியாது; பொது மருத்துவம், குடும்ப மருத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிப்படை விஷயங்களில் குறைபாடு இருப்பது தற்போது எனக்கு புரிந்துள்ளது.
கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. குடும்ப மருத்துவ முறையை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும்.
மருத்துவத்தில் செய்முறை மற்றும் அனுபவக் கற்றல் முறை தேவை” என்றார்.