கிரிக்கெட்டுக்கும் சாம்பலுக்கும் என்ன தொடர்பு? | My Vikatan article about The Ashes Test cricket series

Spread the love

1883 ஆம் வருடம், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போது இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக், “சாம்பலைத் திரும்ப கொண்டு வருவோம்” என்று சூளுரைத்துச் சென்றார்.

இந்த தொடரில் இங்கிலாந்து, மூன்று போட்டிகளில் இரண்டை வென்று, தொடரைக் கைப்பற்றியது.

இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பயன்படுத்திய பெயில்ஸ்களை எரித்து அதனை நான்கு அங்குல உயரமுள்ள டெரகோட்டா கலசத்தில் நிரப்பி, இங்கிலாந்து அணிக்கு பரிசளித்தனர், இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக்கின் வருங்கால மனைவி  ஃப்ளோரன்ஸ் மோர்பி மற்றும் விக்டோரியாவைச் சேர்ந்த சில பெண்கள். இந்த கலசத்தில் இருப்பது எரிக்கப்பட்ட கிரிக்கெட் பந்தினுடைய சாம்பல் என்றும் சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் சூதாட்டமா... புதிய சர்ச்சை!

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் சூதாட்டமா… புதிய சர்ச்சை!

இது முதலாக இரு அணிகளும் மோதுகின்ற டெஸ்ட் தொடர் “ஆஷஸ்” என்ற பெயர் பெற்றது.

ஆஷஸ் தொடரில் இரு அணிகளும் இது வரை 345 போட்டிகளில் விளையாடி உள்ளன. இவற்றில் 142 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 

இங்கிலாந்து 110 முறை கோப்பையை வெல்ல, 93 போட்டிகள் வெற்றி, தோல்வியின்றி முடிந்தன.

சாம்பல் நிரப்பப்ட்ட டெரகோட்டா கலசம், பழமையான ஆஷஸ் கோப்பை என்று அறியப்படுகிறது. இந்த கோப்பை, லண்டனில் உள்ள “மார்லேபோன்’ கிரிக்கெட் கிளப் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக உள்ளது. 1998-99 வருடத்திலிருந்து, கிறிஸ்டலில் செய்யப்பட்ட ஆஷஸ் கோப்பை, வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படுகிறது.

தற்போது ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம் உள்ளது. சாம்பலை வென்று, ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-கே.என்.சுவாமிநாதன், சென்னை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *