கிரிக்கெட் உலகை மிரள வைத்த அந்த 27 பந்துகள்; முகுல் சௌத்ரி எனும் ‘ஒன் மேன் ஆர்மி’! யார் இவர்?| Who Is Mukul Choudhary? in lsg team

Spread the love

கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான இளைஞர்களின் உணர்ச்சி.

ஒரு சிறிய தெருவில் ரப்பர் பந்துடன் தொடங்கும் கனவு, ஒருநாள் ஸ்டேடியத்தின் மின்னொளியில் நனவாகும் போதுதான் ஒரு உண்மையான வீரன் உருவாகிறான்.

அப்படி எவ்விதப் பின்புலமும் இன்றி, தனது அசாத்திய திறமையால் மட்டுமே கான்பூரின் சந்துகளில் இருந்து ஐபிஎல்-லின் பிரமாண்ட மேடைக்கு உயர்ந்தவர்தான் முகுல் சௌத்ரி.

முகுல் சௌத்ரி

முகுல் சௌத்ரி

முகுல் சௌத்ரி ஆகஸ்ட் 6, 2004 அன்று கான்பூரில் பிறந்தார். இவரது தந்தை தலிப் குமார் சௌத்ரி ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதால், முகுல் தனது 6 வயதிலேயே கான்பூரில் உள்ள மைதானங்களில் பயிற்சியைத் தொடங்கினார்.

அதிகாலை பனிப்பொழிவிலும், கடும் வெயிலிலும் தளராத பயிற்சியே அவரை ஒரு சிறந்த வீரராகச் செதுக்கியது. பள்ளி நாள்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளராகப் பயணத்தைத் தொடங்கிய முகுல், ஒரு போட்டியில் விக்கெட் கீப்பர் வராததால் தற்செயலாக அந்தப் பொறுப்பை ஏற்றார்.

அந்த ஒரு தருணம் அவரது வாழ்க்கையையே மாற்றியது. தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் முறையைப் பின்பற்றப் பழகிய முகுல், விரைவில் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகப் உருவெடுத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *