கிரிக்கெட் நட்சத்திரம் ஷிகர் தவான் திருமணம்: அயர்லாந்துப் பெண் மணமகள்! – வைரலாகும் புகைப்படம்! | Former Indian cricketer Shikhar Dhawan has announced his second marriage.

Spread the love

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அயர்லாந்தில் பிறந்த சோபி ஷைன் (Sophie Shine) என்பவரைத் திருமணம் செய்யவிருக்கிறார்.

மன உளைச்சலுக்கு ஆளான ஷிகர் தவான்

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது “Da One Sports’ என்ற விளையாட்டு அகாடமி மற்றும் தனது அறக்கட்டளை மூலம் பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். இவருக்கும் இவரின் முதல் மனைவிக்கும் கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து நடந்தது. அதைத் தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். அந்த இக்கட்டான காலத்தில் சோபி ஷைன் ஷிகர் தவான் வாழ்க்கையில் வந்திருக்கிறார்.

ஷிகர் தவான் திருமணம்

ஷிகர் தவான் திருமணம்

ஷோபி ஷைன்

1990-ல் அயர்லாந்தில் பிறந்த சோபி ஷைன், அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆலோசகராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அபுதாபியில் உள்ள ‘நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தில் 2025 மார்ச் வரை துணைத் தலைவராக பணியாற்றினார். தற்போது ஷிகர் தவானின் ‘டா ஒன் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும், ஷிகர் தவான் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து சமூகப் பணிகளை கவனித்து வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *