கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 8 மணிவரை ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க : பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது.
இந்த புயல் கரையைக் கடக்கும் போது, மெதுவாக கடந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே இரவில் 500 மி.மி. மழை கொட்டித் தீர்த்தது.
தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், உள்மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யத் தொடங்கியது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 503 மி.மீ., தர்மபுரி மாவட்டம் அரூரில் 331 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
ஊத்தங்கரை பாம்பாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீா் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.