கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு – சென்னையைச் சேர்ந்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது | chennai baby sold to krishnagiri couple, 8 arrested

Spread the love

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தை தேவைப்படுவதை அறிந்து அவர்களிடம் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதில் 3 லட்சத்தை சகாயாராஜ்-திலகவதி தம்பதியினரிடம் கொடுத்துவிட்டு மீதி 80 ஆயிரம் ரூபாவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.

இது குறித்து காசிமேடு காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து விசாரணையில் இறஙகியவர்கள், சம்பவம் நடந்தததை உறுதி செய்த பின் திலகவதி, பிரதீபா உள்ளிட்ட நால்வரையும் கைது செய்து குழந்தைகள் நலக் குழுவினர் ஒப்படைத்தனர்.

குழந்தை விற்பனை

குழந்தை விற்பனை
vikatan

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கிருஷ்ணகிரி சென்று குழந்தையை வாங்கிய ராமன் – மாதம்மாள் தம்பதியினருடன், அவர்களுக்கு உதவிய கவிதா, ஜெயலட்சுமி ஆகியோரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது, இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *