75 வயது முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொலைகாரனை கிருஷ்ணகிரி எஸ்.பி தலைமையில் 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூன்றம்பட்டி ஊராட்சிப் பகுதியில் 75 வயதான கண்ணப்பன் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த கண்ணப்பனை அங்கு வந்த மர்ம நபர் கல்லால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அவர் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் படுத்திருந்த மனைவி பதறி அடித்து வெளியில் வந்தபோது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த நபர் மூதாட்டியைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.