இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், சர்க்கார் புறம்போக்கு வகைப்பாடு என இருந்ததை ‘ரயத்துவாரி நத்தம் மனை’ என மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரியில் சுமார் 3,500 பேருக்கும் கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஒசூர் நகரிலும் சுமார் 8,150 பயனாளிகள் பல ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் இருந்தனர். இப்போது அவர்களுக்கும் வகைப்பாடு மாற்றி கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரப் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் வசித்து வந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.
இதுவரை இலவச வீட்டுமனை பட்டா என்பது ஊரகப் பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கிருஷ்ணகிரியில் நகரத்தில் 1,802 பேருக்கும், ஒசூர் நகரத்தில் 3,222 பேருக்கும் முறையாக வரைமுறைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.