நாள் 5
நேற்றைய அத்தியாயத்தில் எப்படி பாசிட்டிவ் மற்றும் பாதுகாப்பைப் பார்த்தோமோ… அது மாதிரி இன்று கிரெடிட் கார்டிற்கு இருக்கும் செக்குகளைப் பார்த்துவிடுவோம்.
கிரெடிட் கார்டு பற்றி நமக்கு விளக்குபவர் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.
ஆரம்பத்தில் இருந்து “லிமிட்… லிமிட்’ என்கிறோமே… அந்த லிமிட்டைத் தாண்டினால் என்ன ஆகும் என்பதைப் பார்ப்போமா?
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டு லிமிட் மீறப்பட்டால் ஒன்று, பரிவர்த்தனை கேன்சல் செய்யப்படும்.
இல்லையென்றால், அந்தத் தொகைக்கு Over-limit கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், வட்டியும் அதிகரிக்கும்… கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும்.

இன்னொரு பக்கம், கிரெடிட் லிமிட் தானாக்க கூட குறையும் தெரியுமா..?
கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தினாலோ, தாமதமாக கட்டணம் கட்டினாலோ கிரெடிட் கார்டு லிமிட் குறைக்கப்படும்.
கிரெடிட் ஸ்கோர் குறைந்தாலும் லிமிட் குறையும். அதையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
100 சதவிகித கிரெடிட் லிமிட்டைப் பயன்படுத்தினால், நமக்குத் தான் கடனில் பெரும் சுமை ஏற்படும். குறைந்தபட்சம் கிரெடிட் லிமிட்டில் 25 – 40 சதவிகிதம் மட்டும் பயன்படுத்துங்கள். அது தான் நல்லது.