கிரெடிட் கார்டு என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது?|Credit Card Basics: Difference Between Debit and Credit Card

Spread the love

இந்தச் சூழல்களில், உதவுவது தான் கிரெடிட் கார்டு. இந்தக் கார்டை ஒரு ஸ்வைப் செய்தால் போதுமானது.

நீங்கள் செலுத்த வேண்டிய தொகை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கணக்கிற்குச் சென்றுவிடும்.

இப்போது நீங்கள் கிரெடிட் கார்டில் இருந்து செலுத்திய தொகை ‘கடனாக’ உங்களுக்கு மாறி நிற்கும்.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

அதை நீங்கள் அதிகபட்சமாக அடுத்த 50 நாள்களுக்குள் வட்டியில்லாமல் செலுத்திவிடலாம்.

இதுவரை சொன்னதெல்லாம் உங்களுக்கே தெரியும். இப்போது ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கலாம் என்பதற்கு வரலாம்.

இவ்வளவு ஹெல்பாக இருக்கிறதே என்று இஷ்டத்திற்கு கிரெடிட் கார்டு வாங்கிவிடக் கூடாது.

விதிமுறைகளின் படி, ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம்… வைத்திருக்கலாம்.

ஆனால், நிதி ஒழுக்கத்தின் படி, ஒருவர் 2 – 3 கிரெடிட் கார்டுகளுக்குள் வைத்திருப்பதே நல்லது.

அப்போதுதான் பேமென்டுகளைச் சரியாகக் கட்டி, சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கலாம்.

என்னதான் பேமென்டுகளைக் கரெக்டாக கட்டி வந்தாலும், அதுவும் ஒரு வகை கடனே. அதனால், அதிக கடனில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது தானே.

இன்று இன்ட்ரோவைப் பார்த்துவிட்டோம். நாளை கிரெடிட் கார்டுகளில் இருக்கும் இரண்டு செக்குகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *