நாள் 2
கிரெடிட் கார்டு குறித்த இன்ட்ரோவை நேற்று பார்த்துவிட்டோம். இன்று கிரெடிட் லிமிட் ப்ளஸ் கிரெடிட் கார்டு எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறார் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.
“வங்கியில் கடன் கேட்கிறீர்கள்… தெரிந்தவரிடம் கைமாத்தாக குறிப்பிட்ட தொகையை கேட்கிறீர்கள். உடனே, கையில் எடுத்து கொடுத்துவிடுவார்களா?
திரும்ப கடனை கொடுத்துவிடுவோமா என்பதை பார்ப்பார்கள் தானே. இதற்கு கிரெடிட் கார்டும் விதிவிலக்கு அல்ல.

எத்தனை தடவை போன் செய்து கிரெடிட் கார்டு வாங்க சொல்லி வங்கிகள் கூறினாலும், அதை தருவதற்கு முன்னால் நம்மிடம் சிலவற்றை செக் செய்வார்கள்.
முதலில், வருமானம். கிரெடிட் கார்டு வாங்கினால், அதை சரியாக கட்டிவிடுவது போல, வருமானம் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.
அடுத்ததாக, கிரெடிட் ஸ்கோர். இந்தக் கிரெடிட் ஸ்கோரை நமது நிதி ஜாதகம் என்றே கூறலாம்.
கிரெடிட் ஸ்கோர் கடன் வாங்கியிருக்கிறோமா… எங்கெல்லாம் கடன் வாங்கியிருக்கிறோம்… வாங்கிய கடனை சரியாக அடைத்திருக்கிறோமோ அல்லது சரியாக கட்டி வருகிறோமா என்பதை காட்டிவிடும்.
ஆக, இந்த இரண்டையும் பொறுத்து, நமக்கு கிரெடிட் கார்டு கொடுக்கலாமா… கொடுத்தால், எத்தனை கிரெடிட் லிமிட் தரலாம் என்பதை நிர்ணயிப்பார்கள்.