கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்கம்: இஸ்லாமியர்கள் 30 நாள்  ரம்ஜான் நோன்பு நாளை ஆரம்பம் – Kumudam

Spread the love

ஏசு கிறிஸ்து சிலு​வை​யில் அறைந்து கொல்​லப்​பட்டு 3-ம் நாள் உயிர்த்​தெழுந்​த​தாக கிறிஸ்​தவர்​களின் புனித நூலான பைபிளில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஏசு உயிர்த்​தெழுந்த தினத்தை உலகெங்​கும் வாழும் கிறிஸ்​தவர்​கள் ஈஸ்​டர் பண்​டிகை​யாக கொண்​டாடு​கிறார்​கள்.

ஈஸ்​டர் பெரு​விழாவுக்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக​வும், அதன் முதல் நாள் சாம்​பல் புதன்​கிழமை​யாக​வும் அனுசரிக்​கப்​படும். இந்த 40 நாள் தவக்​காலத்​தில் கிறிஸ்​தவர்​கள் மீன், இறைச்​சி, முட்டை முதலான அசைவ உணவு​களை தவிர்த்து விடு​வார்​கள். 

இந்த ஆண்டு ஈஸ்​டர் பண்​டிகை ஏப். 5-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. எனவே, அதற்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக அனுசரிக்​கப்​படும். அந்த வகை​யில், தவக்​காலம் சாம்​பல் புதன்​கிழமை​யுடன் இன்று (18-ம் தேதி) தொடங்​கு​கிறது. இதையொட்​டி, தேவால​யங்​களில் சிறப்பு திருப்​பலி​யும், சிறப்பு ஆராதனை​யும் நடை​பெறும்.

இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம் 

இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக உள்ளது நோன்பு. நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.

புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர் ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

பிறையை பார்த்து நோன்பை தொடங்குவது வழக்கம். நேற்றைய தினம் அரபு நாடுகளில் பிறை தென்பட்டதால், இன்று முதல் அரபு நாடுகளில் ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் நாளை முதல் நோன்பு தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்று இரவு பிறை தென்படும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *