கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி!

Dinamani2f2024 12 222f1jmpslku2fgfncmkfasaawm8q.jpg
Spread the love

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருங்கிணைக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.

புது தில்லியில் நாளை (டிச. 23) சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருங்கிணைக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் மாலை 6.30 மணியளவில் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்திய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் ஒருவர் கலந்துகொள்ள இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கார்டினல்கள், ஆயர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பங்கேற்பின் மூலம், கலாச்சாரம் தொடர்பான உரையாடல்கள் ஊக்குவிக்கப்படும் என்றும், இது கிறிஸ்தவ சமூகத்துடன் உறவுகளை வலுப்படுத்தும் அரசின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது!

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் கத்தோலிக்க மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்பாகும். மேலும், இந்த அமைப்பு மத அடிப்படையிலான முயற்சிகளை ஊக்குவித்து, சமூக பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

டிசம்பர் 19 அன்று மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியனின் இல்லத்தில் நடைபெற்ற மற்றொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் , பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு, கிறிஸ்தவ சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தக் கொண்டாட்டத்தின் தேவையை வலியுறுத்தினார்.

இதையும் படிக்க | மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை: பாடகர் சர்ச்சை பேச்சு!

காதல், தியாகம் மற்றும் கருணையின் போதித்த மதிப்பிற்குரிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவர்களுக்கு மதம் மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும்.

கிறிஸ்துமஸ் விழா மதச் சடங்குகள், பிரார்த்தனைகள் மற்றும் கேரல் பாடல்களுடன் கொண்டாடப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் நம்பிக்கையையும் மனிதர்களின் மாற்றத்தையும் பிரதிபலிக்கும் ஆன்மீகச் செய்தியாக வெளிப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *