எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்கிறது.
தமிழ் சினிமாவிலும் சரி விஜய் படங்களில் சரி கில்லி திரைப்படம்தான் மறுவெளியீட்டில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
குஷி திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்குமா என சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.