அதற்கும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காத காரணத்தால், நவம்பர் 12 ஆம் தேதி (12/11/2025 ) அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டு போடும் போராட்டதை அறிவித்தோம்.
உடனே, அதற்கு முந்தய நாளான நவம்பர் 11 ஆம் தேதி (11/11/2025) மாலை 6 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாரத்தை நடைபெற்றது.
வட்டாச்சியர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் (BDO), காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் , கிராம நிர்வாகம் அலுவலர் திலகவதி, (VAO) ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், சாலையை சரி செய்வதற்கு நிதி இல்லை என்று BDO பாஸ்கர் கூறினார்.

இருப்பினும், தற்காலிகமாக சுடுகாடு பாதை மட்டம் செய்து தரப்படும் என்றும், அடுத்த பத்து நாள்களுக்குள் வேலை நடைபெறும் என்றும், வாக்குறுதி கொடுத்தனர்.
இந்த வாக்குறுதிக்கு வட்டாச்சியர் இளங்கோவன் உட்பட முன்னிலை வகித்த அதிகாரிகள் அனைவரும் கையெழுத்து போட்டு ஒப்புதலும் வழங்கினர்.
ஆனால், பத்து நாள் முடிந்த நிலையிலும் எந்த முன்னெடுப்பையும் எடுக்காத சூழலில்தான், எங்கள் கிராமத்து முதியவர் துரைக்கண்ணு இறந்தார்.
அவரது உடலை மீண்டும் அதே வழியில்தான் வாகன விபத்தில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தோம். இதுவரை அரசாங்கம் நாங்கள் கேட்ட சாலையை போட்டுத்தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசாங்கம் எங்களுக்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்க வில்லை. விரைந்து இந்த அவலநிலை தொடராமல், போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்!” என்று செல்வகுமார் கோரிக்கை வைத்தார்.