கீழடி அகழாய்வில் செப்புப் பொருள்கள்

Dinamani2f2024 072fe8bdb3ba E25f 40de 94c3 40ba29b1c23b2fkeeladi 0307chn 84 2.jpg
Spread the love

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 10- ஆம் கட்ட அகழாய்வின் போது உடைந்த நிலையில் பச்சை வண்ண செப்புப் பொருள்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுத் தளத்தில் கடந்த மாதம் 18 -ஆம் தேதி 10- ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதற்காக தோண்டப்பட்ட இரு குழிகளிலிருந்து ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மற்றொரு அகழாய்வுக் குழியிலிருந்து நான்கு அடி ஆழத்தில் உடைந்த பச்சை வண்ண செப்புப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 8 துண்டுகளாகக் கிடைத்துள்ள இந்த செப்புப் பொருள்களில் ஒன்று பெரியதாகவும், மற்றவை சிறியதாகவும் உள்ளன. சில செப்புப் பொருள்களில் பச்சை வண்ணம் தெளிவாகத் தெரிகிறது.

இதுகுறித்து கீழடி அகழாய்வு இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய்குமாா் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட்ட செப்புப் பொருள்கள் ஆய்வுக்கு பின்னரே எந்த மாதிரியானவை என்பது தெரியவரும் என்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *