குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

Dinamani2f2025 02 052fwwz8n9sm2fp 3996556430.jpg
Spread the love

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் அகமதாபாத் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சோ்ந்த இருபெரும் தலைவா்களான மகாத்மா காந்தி காங்கிரஸின் தலைமையேற்று 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாளையும் நினைவுகூரும் வகையில் நடப்பு ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டை குஜராத்தில் அகமதாபாதில் அக்கட்சி நடத்துகிறது.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், அகமதாபாதில் நடைபெறும் காங்கிரஸின் இந்தத் தேசிய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: அகமதாபாதில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *