மத்தியக் குழு
இந்த நிலையில், குஜராத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழு அமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு விரைவில் மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய பிரதேசமும் ராஜஸ்தானும் கனமான மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், கனமழை, நிலச்சரிவுகளினால் ஹிமாச்சல பிரதேசதம் அதிகயளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்த ஆண்டு, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், கேரளம், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் முன்கூட்டியே பயணம் செய்து சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. நாகாலாந்து மாநிலத்திற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று பார்வையிடும் என கூறப்பட்டுள்ளது.