குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

Spread the love

வதோதராவில் மூன்று வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ள ஒருவர் இது குறித்து கூறுகையில், “‘டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டதை நிரூபிக்க, சோசியல் மீடியா புள்ளிவிவரங்கள் அடங்கிய பெரிய கோப்புகளை கட்சி கேட்டுள்ளது. பாரம்பர்யமான வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதை விட, டிஜிட்டல் தளங்கள் மூலமான பிரசாரம் மிக அதிக அளவிலான மக்களைச் சென்றடைவதாகக் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்” என்றார்.

வதோதராவில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ள வழக்கறிஞர் ஹர்ஷத் பார்மர், தனது சோசியல் மீடியா விவரங்கள் குறித்து 45 பக்கத்திற்கு கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”தென்னிந்தியாவின் சில மாநிலங்களில் சோசியல் மீடியா விவரங்கள், ஏ.ஐ. தொழில் நுட்பம் போன்றவை வேட்பாளர்களை தேர்வு செய்ய சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் குஜராத்தில்தான் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கோபாலுக்கு எதிராக, பார்மர் வெளியிட்ட ரீல்ஸ் ஒன்றை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் குறித்து வெளியிட்ட ஒரு ரீல்ஸ், 5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. சோசியல் மீடியா விவரங்கள் கேட்பது குறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ”வேட்பாளர்களுக்கு சீட்டுகளை வழங்குவது குறித்த இறுதி முடிவு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடமும் மாநிலச் செயற்குழுவிடமும் தான் இருக்கும். குறிப்பிட்ட சில வார்டுகளில், வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்காதவர்களைக்கூட வேட்பாளர்களாக நிறுத்தும் அதிகாரம் கட்சிக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார். பா.ஜ.க-வின் இந்த புதிய நடைமுறையால் சோசியல் மீடியா கணக்கு இல்லாதவர்கள்கூட புதிய கணக்கைத் தொடங்கி ரீல்ஸ்களை அதிக அளவில் வெளியிட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *