குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

dinamani2F2025 09 092Fzbf8mjdn2FCP Radhakrishnan thanks edi 3
Spread the love

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். செப். 12ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

”நாட்டின் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். பொது வாழ்வில் உங்கள் பல ஆண்டுகால அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். வெற்றிகரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

2025 குடியரசு துணைத் தலைஅவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவரது வாழ்க்கை எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இவர்களின் பதிவுக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் மனமார்ந்த வாழ்த்துகலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: செப்.12-ல் குடியரசு துணைத் தலைவராகிறார்?

C P Radhakrishnan thanks President, PM after his election as VP

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *