குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

dinamani2F2025 08
Spread the love

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டு போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) முழு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா இன்று (ஆக. 27) தெரிவித்தார்.

அதேபோல, சிபிஐ(மார்க்சிஸ்ட்) கட்சியும் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலர் எம். ஏ. பேபி தெரிவித்தார்.

PTI08 27 2025 000227B
சிபிஐ(மார்க்சிஸ்ட்) பொதுச்செயலர் எம். ஏ. பேபிவுடன் பி. சுதர்ஷன் ரெட்டி

முன்னதாக இன்று, தில்லியிலுள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு ஆதரவு கோரிச் சென்ற பி. சுதர்சன் ரெட்டிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது டி. ராஜா பேசும்போது, “எங்களது கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு முழு ஆதரவு தருகிறது.

வலதுசாரி ஃபாசிச சக்திகளால் நாடு கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்தக் காலத்தில், அரசமைப்பு தாக்குதலின் கீழ் இருக்கும் இந்தக் காலக்கட்டதில், நமது சமுதாயத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக நார்கள் தாக்குதலில் இருக்கும்போது… அவர் அரசமைப்பு மாண்புகளை உயர்த்திப்பிடிக்கும் இந்தியாவின் மதிப்புக்குரிய நீதிமான்களில் ஒருவர்.

அவர் எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்பட்டுள்ள ஜனநாயகத்துக்காகவும் நாட்டின் அரசமைப்புக்காவும் துணை நிற்கும் வேட்பாளர் ஆவார்” என்றார்.

Delhi: Opposition’s VP candidate B Sudershan Reddy arrived at the CPI office in Delhi

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *