ஸ்டாலின் கறார்
இன்று கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று ஸ்டாலினும் ஓப்பனாக சொல்லிவிட்டார்.
நேற்று டெல்லியில் நடத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ், தேர்தல் குழுவை விரைந்து அமைக்க வேண்டும் என்று திமுகவை வலியுறுத்தியிருக்கிறது.
ஆனால் திமுகவிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. மாநாடுகளை நடந்தி வருகிறார்கள். பல திட்டங்களை நிறைவேற்றி திறப்பு விழாவை நடந்தி வருகிறார்கள்.

திமுக-விற்கு கட்டாயம் இருக்கிறதா என்ன?
தேர்தல் அட்டவணையை வெளியிட்டால் இந்த வேலைகளைச் செய்ய முடியாது என்பதால் கடைசி நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற விஷயங்களில் திமுக கவனம் செலுத்துவதால், குழு அமைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
கடந்த முறை ஏப்ரலில் தேர்தல் நடந்தபோது பிப்ரவரியில் தான் தேர்தல் குழுவை அமைத்தது திமுக.
திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
காங்கிரஸ் குழு அமைத்ததால் திமுகவும் குழு அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?