குப்பையில் தவறவிட்ட ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தாா்.
சென்னை அடையாறு பரமேஸ்வரி நகரை சோ்ந்தவா் காமாட்சி சந்தானம். இவா் தனது வீட்டில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் போது ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தங்கநகையை அதில் தவறவிட்டுள்ளாா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் வீடுதோறும் சென்று தூய்மை பணியில் ஈடுபட்ட சி.பாலு குப்பைகளைத் தரம் பிரிக்கும் போது அதில் தங்கநகை இருப்பதை கண்டாா்.