குமரி: `இன்ஸ்டா மூலம் வலை; சிறுமிகள் வன்கொடுமை’ – மாநிலம் கடந்து போலீஸில் சிக்கிய கேரள வாலிபர்

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற அந்த சிறுமி பின் மாயமானார். பெற்றோர் சிறுமியை தேடி வந்த நிலையில், மறுநாள் வீடு திரும்பினார் சிறுமி. எங்கு சென்றாய் என பெற்றோர் கேட்டதற்கு, தனது இன்ஸ்டாகிராம் காதலன் பீட்டர் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பைக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்றதாகவும், கன்னியாகுமரியில் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அடுத்த நாள் காலை தான் அணிந்திருந்த தங்க கம்மல், மோதிரம் ஆகியவற்றை கழற்றி வாங்கிகொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் தன்னை பைக்கில் அழைத்துவந்து அம்மாண்டிவிளை பகுதியில் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும், காதலன் ஏமாற்றியதை உணர்ந்து வீடு திரும்பியதாகவும் அந்த சிறுமி தெரிவித்தார். மேலும் வாலிபரின் முகவரி உள்ளிட்ட விபரங்கள் தெரியாது எனவும் சிறுமி கூறியுள்ளார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்டா வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான அவரைத் தேடிவந்தனர்.

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட பினு

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட பினு

அந்த வாலிபரின் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்ய முயன்றும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வாலிபரின் இன்ஸ்டாகிராம் கணக்கும் லாக் அவுட் செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரியில் அவர்கள் தங்கியிருந்த விடுதியை அடையாளம் கண்டு அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு கண்காணிப்பு கேமரா இல்லை. மேலும், அந்த விடுதியில் போலியான ஆதார் எண் கொடுத்து அறை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் வாலிபர் அந்த சிறுமியை  தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த சிம் பயன்படுத்தப்பட்ட செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை ஆய்வு செய்தபோது, அதில் வேறு புதிய சிம் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த புதிய சிம் தேனி மாவட்டம் கூடலூரில் ஒரு வீட்டில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து டவர் லொக்கேஷன் மூலம் தேனி மாவட்டம் கூடலூர் விரைந்த போலீஸார் செல்போன் பயன்பாட்டில் இருந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் வாலிபர் கேரளா மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த பினு (24) என்பது தெரியவந்தது.

டீ மாஸ்டரான அவர் திருவிழா கடைகளுக்கு சென்று குலுக்கி சர்பத் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் காதலித்த ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னிடம் ஒரு நாள் தங்க அடைக்கலம் கேட்டதாகவும், இரவு தங்கியவர் காலையில் சொந்த ஊரான கேரளா மாநிலம் இடுக்கி அருகே உள்ள கட்டப்பனை கிராமத்திற்கு செல்வதாக கூறி சிறுமியுடன் சென்று விட்டதாகவும் தெரிவித்த அந்த பெண் பினுவின் புகைப்படத்தையும் போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *