கும்பகோணம்: ”சார் நீங்க பேட் டச் செய்றீங்க”- கொதித்த மாணவிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது | Kumbakonam: “Sir, you are touching bad” – angry students; Government school teacher arrested under POCSO

Spread the love

இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் ராஜமனோகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் புகார் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் பெரிதான நிலையில் ராஜமனோகர் பள்ளிக்கு லீவ் போட்டு விட்டார். இந்தச் சூழலில், ராஜமனோகரன், திருவிடைமருதூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரிடம், ”என்னை இதில் இருந்து காப்பாத்துங்கள்” என்று உதவி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரும் இதனை வெளியே தெரியாமல் மறைப்பதற்காகக் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால், மாணவிகள் ராஜமனோகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து லீவ் எடுத்திருந்த ராஜமனோகரன் கடந்த 23-ம் தேதி பள்ளிக்கு வந்துள்ளார்.

இதைதொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து, குழந்தைகள் நல அலுவலர் சத்யா, திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஆசிரியர் ராஜாமனோகர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *