இதையடுத்து தொடர்ந்து பெய்த கனமழையில் நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, ஆஸ்பெட்டாஸ் வீட்டின் மேல் விழுந்தது. இதில், முத்துவேல், சீதா, கனிமொழி, ரேணுகா ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் காயமடைந்து கிடந்தவர்களை மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் முத்துவேலின் இரண்டாவது மகள் ரேணுகா, மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வருவாய்துறை மற்றும் கும்பகோணம் தாலுக்கா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பாக இருப்பதற்கு அருகில் இருந்த வீட்டுக்குச் சென்றனர். அந்த வீட்டின் மேல் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இப்படி ஒரு துயர நிலை நடந்துள்ளது.
இதை ரேணுகாவின் பெற்றோர் மற்றும் சகோதரி எப்படித் தாங்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை என உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.